ரேஷன் கடைகளால் கொரோனா 3வது அலை வந்துவிடுமோ என்று பயப்படுவதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக முதல்வராக பதவியேற்ற கையோடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்றார் மு.க. ஸ்டாலின். இதையடுத்து முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் இது குறித்து நடிகை ஆர்த்தி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ரேசன் கடைகளால் 3வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் வருகிறது...அரசு அரிசி அட்டையாளர்களின் Accountல் பணம் செலுத்தலாமே, கூட்டத்தை தவிர்க்கலாமே, கடுமையான வெயிலில் பெரும்பாலும் வயதானவர்களே காத்துக்கிடக்கின்றனர். பரிசீலித்துப் பாருங்களேன் @CMOTamilnadu @mkstalin #COVIDEmergency #Corona என்றார்.
அவரின் ட்வீட்டை பார்த்த சிலரோ, சரியாக சொன்னீர்கள் அக்கா என தெரிவித்துள்ளார். ஆனால் மற்றவர்கள் கூறியிருப்பதாவது,
வங்கியில் செலுத்தினால் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி ஆயிரம் ரூபாயை புடுங்கிவிடுவார்களே. ஒரு நாளைக்கு 200 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்படுகிறது. அதனால் எந்த ரேஷன் கடையிலும் கூட்டம் இல்லை. நீங்கள் தேவையில்லாமல் புலம்ப வேண்டாம்.
மக்கள் மறுபடியும் ஏடிஎம் வாசலில் நிற்க வேண்டுமா?. வங்கி கணக்கில் செலுத்தினால் முதல்வருக்கு பதில் ‘அவர்’ கொடுத்ததாக சொல்லவா?
வங்கியில் செலுத்தினால் குக்கிராமத்தில் வசிப்பவர்களால் பணத்தை உடனே எடுக்க முடியாது. உங்கள் அறிவுரை எல்லாம் அந்த கட்சியோடு நிறுத்திக் கொள்ளுங்கள். என்ன செய்ய வேண்டும் என்பது முதல்வருக்கு தெரியும்.
கும்பமேளாவில் கூடாத கூட்டம் தான் ரேஷன் கடைகளில் கூடி மூன்றாவது அலைக்கு காரணமாகிவிடப் போகுதாக்கும். போக்கா, போய், வேறு வேலை இருந்தா பாருங்க என தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் இரண்டாம் அலைக்கு தேர்தல் ஆணையம் தான் முக்கிய காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் மேலும் தெரிவித்தது. இந்நிலையில் ரேஷன் கடைகளால் மூன்றாவது அலை வந்துவிடுமோ என்று ஆர்த்தி அஞ்சுகிறார்.