கரட்டின் அற்புத நன்மைகள்!

Date:

தினமும் நம் உணவோடு காய்கறி, கீரை, பழ வகைகளை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் உடலுக்கு தேவையான ஆற்றலோடு ஆரோக்கியமாக இருக்க முடியும். அப்படி பல ஆரோக்கியமான காய்கறிகளில் மிக முக்கியமான ஒன்றென்றால் கேரட்டைச் சொல்லலாம். கேரட்டைப் பச்சையாகவும் சாப்பிடலாம், குழம்பாகவும், பொறியல் செய்து, சாலட், ஜூஸ் என நமக்கு பிடித்தவாறு எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

இதனால் அப்படி என்ன நன்மை கிடைக்கப்போகிறது? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

  • இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின் ஆதாரமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்தும் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது.
  • இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும் இதைய நோய் ஏற்படாமல் தடுக்கவும் உதவியாக இருக்கிறது.
  • கரட்டில் லியூட்டின் (lutein) மற்றும் லைகோபீன் (lycopene) இருப்பதால் கண்பார்வை குறைபாடு இருப்பவர்கள் கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம். இது கண்பார்வை குறைபாட்டைப் போக்கும் திறன் கொண்டது.
  • எடை இழக்கும் முயற்சியில் நீங்கள் இருந்தால், நீங்கள் தவிர்க்கக்கூடாத ஒரு உணவு கரட். இது நார்ச்சத்துக்களை கொண்டிருப்பதால் பசி உணர்வை குறைத்து உங்கள் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.
  • சீரான குடல் இயக்கம் மற்றும் செரிமான அமைப்பு சீராக கரட் மிகவும் உதவியாக இருக்கும்.
  • கெட்ட கொழுப்புகளை குறைத்து இதய பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க ஏற்ற உணவு கரட்.
  • உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து உங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கரட் அவசியம்.
  • பெண்களாயினும் ஆண்களாயினும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால் கேரட்டை தங்கள் உணவில் தவிர்க்காமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த தீவிரமான கொரோனா தொற்று பரவி வரும் வேளையில், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்த கரட் சாப்பிடுவது கட்டாயம்.
spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...

கொள்ளுப்பிட்டியில் சடலம் மீட்பு

கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்