முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தடைவிதிக்கக் கோரி கோப்பாய் பொலிசார் தாக்கல் செய்த மனுவை யாழ் நீதிவான் நிராகரித்துள்ளார்.
எம்.கே.சிவாஜிலிங்கம், நல்லூர் பிரதேசசபை தவிசாளர், பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு நினைவேந்தல் நடத்த தடைவிதிக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர் போலிடம் கோப்பாய் பொலிசார் இன்று விண்ணப்பம் செய்தனர்.
எனினும், ஒரு சம்பவம் நடக்க முன்னர் ஊகத்தின் அடிப்படையில் தடைவிதிக்க முடியாது என நீதிவான் மனுவை நிராகரித்தார்.
பொலிசார் குறிப்பிடும் குற்றத்தின் கீழ் ஏதேனும் சம்பவம் நடந்தால், அவர்களை கைது செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு உள்ளதென்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1