சீனாவை சந்தோசப்படுத்தும் முயற்சியே துறைமுக நகர சட்டமூலம்!

Date:

முன்மொழியப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபை நிறைவேற்ற அரசாங்கம் காட்டும் அவசரம்,  சீனாவைப் சந்தோசப்படுத்தும் முயற்சியே என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது.

இன்று ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இதன் விளைவாக இலங்கை இந்தியப் பெருங்கடலில் உலக வல்லரசுகளின் இரையாக இலங்கை மாறும் எச்சரித்தார்.

சீன பாதுகாப்பு மந்திரி அடுத்த மாதம் நாட்டிற்கு வர உள்ளார். இதற்குள் சீனாவை மகிழ்விப்பதற்காக அரசாங்கம் மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் கூறினார்.

இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை அச்சுறுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றிற்கு எதிராக உலக நாடுகள் முன்னுரிமை கொடுத்து செயற்பட்டு வரும் நேரத்தில், இலங்கை  அரசாங்கத்தின் முன்னுரிமைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

spot_imgspot_img

More like this
Related

பாம்பு கடித்த நாவல்பழத்தை சாப்பிட்ட சிறுவன் பலி

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை...

பாடசாலைகளிலும் போதைப்பொருள் சோதனை!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் போதைப்பொருட்களைக் கண்டறியும் சோதனைகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள்...

சமூக ஊடகங்களில் பெண்ணின் அந்தரங்க படங்களை பரப்பியவர் கைது!

சமூக ஊடகங்களில் ஒரு பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பரப்பியதற்காக, கினிகத்ஹேன பகுதியில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்