திருமுறுகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன் புதிய கொரோனா சிகிச்சை நிலையம்

Date:

கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி பகுதியில்
350 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் இன்று (14)
முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது.

ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம்
வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக
மலையாளபுரம் கிராமத்தில் இதுவரை காலமும் இராணுவ வைத்தியசாலையாக இருந்து
வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக 07.05.2021 அன்று
தொடக்கம் மாற்றப்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி
பகுதி இராணுவ முகாம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இன்றிலிருந்து
மாற்றப்படுகிறது. குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை இன்று 14.05.2021
கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல்
ஹரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவிக்கையில் கிளிநொச்சி
மாவட்டத்தில் 06 கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என
தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்