ஒரே வீட்டில் 50 பாம்புகள் ; அச்சத்தில் மக்கள்!

Date:

உ.பி மாநிலத்தில் ஒரே வீட்டில் 50 பாம்புகள் கண்டெடுக்கப்பட்டது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியில் ஒரே வீட்டில் இருந்து பல பாம்புகள் வந்ததால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் கயா பிரசாதா தனது வீட்டில் நேற்று சில குட்டி பாம்புகளை கண்டதாகவும் அவற்றை வயல்களில் விட்டுவிட்டதாகவும் கூறுகிறார்.

பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அவரது வீட்டில் இருந்து பாம்புகள் வரத் தொடங்கியுள்ளன. பின்னர் கிராமவாசிகள் அப்பகுதியில் குவிந்தனர். பின்னர் பாம்பாட்டி ஒருவரை அழைத்துவந்து பாம்புகளை பிடித்துள்ளனர்.

பிறகு பாம்புகள் வனப்பகுதியில் விடப்பட்டன. இதுகுறித்து கயா பிரசாத், “இதுவரை 50க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து வெளியே விட்டுள்ளோம். வீட்டில் பாம்பை பார்ப்பது வழக்கம்தான். ஆனால் ஒரே நேரத்தில் இத்தனை பாம்புகளை பார்த்ததே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஒரே வீட்டில் 50க்கும் மேற்பட்ட பாம்புகள் இருந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர். 2018ஆம் ஆண்டில் மீரட் மாவட்டத்தில் ஒரே வீட்டில் 150 பாம்புகள் இருந்தது நினைவுகூரத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

யாழ்ப்பாணத்தில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவை 190 மில்லியன்...

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்ய கோரி மீனவர்கள் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலையை தடை செய்யுமாறும் சுருக்கு வலைக்கு  உடந்தையாக...

119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்