சில நாட்களுக்கு முன் கொரோனா காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு ஒளிப்பதிவாளர் – இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார். இந்த செய்தி திரையுலகை மட்டுமல்லாது பொது மக்கள் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
இது குறித்து, நடிகர் சிம்பு, KV ஆனந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தார். அதில் “அவர் இயக்கிய “கோ” படத்தில் நான் நடிப்பதாக இருந்தது ஆனால் நடக்காமல் போய்விட்டது” உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
சொல்லி வைத்தாற்போல அப்போது சிம்புவை வைத்து எடுத்த கோ படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்களில் அஜ்மலை மடியில் வைத்து சிம்பு அழுவது போலவும், கார்த்திகா பக்கத்தில் சிம்பு அமர்ந்திருப்பது போலவும் உள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1