27.6 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

கிழக்கு ஆளுநரின் அனுசரணையுடன் சம்மாந்துறையில் உலருணவுகள் வழங்கி வைப்பு..

புனித ரமழானை முன்னிட்டு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்தின் அனுசரனையுடன் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு கொவிட் 19 சுகாதார பின்பற்றுதலுடன் உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர், சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி, சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கிழக்கு மாகாண ஆளுனரின் மகளிர் அபிவிருத்தி சமூக சேவை இணைப்பு செயலாளரும், ஸ்டார் லைஃப் மகளிர் அபிவிருத்தி நிறுவன தலைவருமான எம்.எம்.றபீக் தலைமையில் கமு/சது/ அல் – அர்சத் மகா வித்தியாலய மண்டபத்தில் புதன்கிழமை (12) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளிடம் 412 பயனாளிகளுக்கான உலருணவுகளை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தவிசாளர் சாமர நிலங்க, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ். ஜெயலத், கிராம நிலதாரிகள், ஸ்டார் லைஃப் மகளிர் அபிவிருத்தி நிறுவன உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

‘மணல் கொள்ளையில் ஈடுபடாதீர்கள்’: ஐ.தே.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை!

Pagetamil

Leave a Comment