ஊரடங்கால் பிரிந்த மனைவி, குழந்தைகளை சந்திக்க பேருந்து திருட்டு!

Date:

ஊரடங்கில் மனைவி மற்றும் குழந்தையை சந்திக்க பல மாவட்டங்களை கடந்த செல்ல வேண்டியிருப்பதால் ஒருவர் தனியார் பேருந்தையே கொள்ளையடித்துள்ளார்.

கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா அருகே திருவல்லாவை சேர்ந்த பினூப் என்பவர் தனது சொந்த ஊரில் வசிக்கும் மனைவி மற்றும் குழந்தையை பார்க்க முடியாமல் கவலையில் இருந்துள்ளார்.

சொந்த ஊர் செல்ல பேருந்து இல்லாததால் 4 மாவட்டங்களை கடந்து செல்ல வேண்டும் என்பதால் கோழிக்கோடு அருகே நின்றிருந்த தனியார் பேருந்தை திருடி தானே இயக்கிக் கொண்டு புறப்பட்டார்.

சில இடங்களில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்த போது, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர அதிகாரிகள் அனுப்பியதாக கூறி தப்பி வந்தார்.

ஆனால் மலப்புரம், திருச்சூர் வழியே கோட்டயத்தை அடைந்த போது அங்குள்ள காவலர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்ததால் பினூப்பை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அப்போது தான் பேருந்தை திருடி வந்த உண்மையை அவர் ஒப்புக்கொண்டடுள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த அதிகாரிகள் பேருந்தை பறிமுதல் செய்தனர்.

spot_imgspot_img

More like this
Related

அனோஜனை காப்பாற்றிய சட்ட நுணுக்கங்கள்!

சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம், இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு...

இலங்கையில் ஆறரை வருடத்தில் 5வது முறையாக நாடளாவிய மின்வெட்டு

இலங்கையில் நேற்று, 2020 பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஐந்தாவது முறையாக நாடு...

தடைசெய்யப்பட்ட அதிவேக மோட்டார் சைக்கிள்கள் யாழில் பறிமுதல்

இலங்கையில் தடை செய்யப்பட்ட அதிக வேகத்திறன் (சி.சி) கொண்ட 5 மோட்டார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்