26.9 C
Jaffna
January 28, 2025
Pagetamil
இந்தியா உலகம்

இந்தியா சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் ; சீன நிபுணர்கள் கணிப்பு!

ஐநாவின் கணிப்பை மீறி, 2027 ஆம் ஆண்டிற்கு முன்னதாகவே இந்தியா உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும் என்று சீன மக்கள்தொகை வல்லுநர்கள் கூறியுள்ளனர். சீனா கடந்த சில ஆண்டுகளில் பிறப்பு விகிதத்தில் நிலையான வீழ்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போதிலிருந்து 2050’க்கு இடையில் இந்தியா கிட்டத்தட்ட 273 மில்லியன் மக்களை அதன் மக்கள்தொகையில் புதிதாக சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019’இல் வெளியானஐ.நா. அறிக்கை, 2027’இல் இந்தியா சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்கும் என்று கணித்துள்ளது.

நடப்பு நூற்றாண்டின் இறுதியில் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா.வின் புள்ளிவிவரங்களின்படி, 2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் 1.37 பில்லியன், சீனா 1.43 பில்லியன் மக்கள் தொகை இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று சீனா வெளியிட்ட ஒரு தசாப்தத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீனாவின் மக்கள் தொகை மிக மெதுவான வேகத்தில் வளர்ந்துள்ளது.

மக்கள்தொகை வீழ்ச்சி தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் நுகர்வு அளவு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவின் எதிர்கால பொருளாதார பார்வையை பாதிக்கும்.

2027’க்கு முன்னர் இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தக்கூடும் என்று சீனாவின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி சீனாவின் அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் நாளேடு இன்று தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் ஆண்டுகளில் சீன பிறப்பு கருவுறுதல் வீதங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள்தொகை வல்லுநர்கள் அதன் அதிக கருவுறுதல் வீதத்துடன் 2023 அல்லது 2024’ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள சீனாவை இந்தியர்கள் முந்திக் கொள்வார்கள் என்று கணித்துள்ளனர்.

பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் லு ஜீஹுவா, 2027 ஆம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை குறையத் தொடங்கும் முன் உச்சம் பெறக்கூடும் என்றார்.சில புள்ளிவிவரங்கள் 2022’க்குள் உச்சம் வரக்கூடும் என்று நம்புகிறார்கள்.

சீனாவும் குறைந்த கருவுறுதலின் வலையில் விழும் அபாயத்தை எதிர்கொள்கிறது. இது 2020 ஆம் ஆண்டில் 12 மில்லியன் பிறப்புகளைப் பதிவுசெய்தது. இது தொடர்ந்து நான்காவது ஆண்டாக வீழ்ச்சியைக் குறிக்கிறது.குழந்தை பிறக்கும் வயதினரின் சீனாவின் மொத்த கருவுறுதல் விகிதம் 1.3 ஆகும், இது ஒப்பீட்டளவில் குறைந்த அளவு.

ஐ.நா.வின் உலக கருவுறுதல் மற்றும் குடும்ப திட்டமிடல், 2020 அறிக்கையின்படி, உலக கருவுறுதல் விகிதம் 2019 இல் 2.5 ஆக இருந்தது.பீக்கிங் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரான லியாங் ஜியான்ஷாங், குளோபல் டைம்ஸிடம், சீனாவின் கருவுறுதல் விகிதம் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வீழ்ச்சியடையும், இது உலகின் மிகக் குறைவானதாக மாறக்கூடும் என்று கூறினார்.

“தற்போதுள்ள தரவுகளின்படி, அடுத்த 10 ஆண்டுகளில், 22 முதல் 35 வயதுடைய பெண்களின் எண்ணிக்கை தற்போதைய தரவுகளுடன் ஒப்பிடும்போது 30 சதவீதத்திற்கும் அதிகமாக குறையும்” என்று அவர் கூறினார்.

“வலுவான கொள்கை தலையீடு இல்லாமல், சீனாவின் புதிதாகப் பிறந்த மக்கள் தொகை அடுத்த சில ஆண்டுகளில் 10 மில்லியனுக்கும் குறைவாகக் குறைய வாய்ப்புள்ளது. மேலும் அதன் கருவுறுதல் விகிதம் ஜப்பானை விடக் குறைவாக இருக்கும். தற்போது ஜப்பான் தான் உலகின் மிகக் குறைவான கருவுறுதலைக் கொண்டுள்ளது” என்று லியாங் கணித்துள்ளார்.

மக்கள்தொகை நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சீனா 2016’இல் ஒரு குழந்தை கொள்கையை நிறுத்தி இரண்டு குழந்தைகளை அனுமதித்தது, ஆனால் இரண்டாவது குழந்தை பிறக்க ஒரு சிலர் முன்வந்ததால் குறைந்து வரும் மக்கள்தொகையை நிறுத்த இது மிகவும் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதியினருக்கு கிடைக்கக்கூடிய குழந்தைகளின் எண்ணிக்கையில் சீனா அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுவிக்கப்படவிருந்த 8 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உயிரிழப்பு

east tamil

நைஜீரியாவில் பெற்றோல் தீப்பற்றி வெடித்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

east tamil

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

east tamil

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

நல்லி குப்புசாமி, அஜித், ஷோபனாவுக்கு பத்ம பூஷண்; அஸ்வின், வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு

Pagetamil

Leave a Comment