கிழக்கு

தவிசாளரின் புதிய குளிருட்டி கொள்வனவு தொடர்பில் சபையில் சலசலப்பு

தவிசாளரின் புதிய குளிருட்டி கொள்வனவு தொடர்பில் சபையில் சலசலப்பு ஏற்பட்டதுடன், தவிசாளரினால் கொண்டு வரப்பட்ட பல விடயங்கள் பிரேரணைகள் சில உறுப்பினர்களின் செயற்பாடுகளினால் சிறிது சலசலப்புடன் சபை நடவடிக்கைகள் இடம்பெற்று நிறைவடைந்தன.

அம்பாறை மாவட்டம் காரைதீவு 3ஆவது பிரதேச சபையின் 39 ஆவது மாதாந்த சபைக்கூட்டம் புதன்கிழமை(12) தவிசாளர் கி. ஜெயசிறில் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது கூட்ட ஆரம்ப நிகழ்வாக தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.தொடர்ந்து 38 ஆவது அமர்விற்கான கூட்டறிக்கை நிறைவேற்றப்பட்ட நிலையில் சில உறுப்பினர்கள் கேள்வி கேட்டதனாலும் கருத்துக்களை தெரிவிற்க முற்பட்டதனாலும் சபையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் தவிசாளர் குறித்த விடயம் தெளிவாக இல்லை என கருதுபவர்கள் எழுத்து வடிவத்தில் பதில்களை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.அத்துடன் தவிசாளரின் சபை தேவைகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்பாக உரையாற்றப்பட்டது.இதில் சில உறுப்பினர்கள் எழுந்து கருத்துக்களை கூறி சபையில் சலசலப்புகளை ஏற்படுத்தினர்.

இதில் தவிசாளரின் குளிருட்டி பழுதடைந்தமை தொடர்பிலும் அதற்கு பதிலாக புதிய குளிருட்டி ஒன்றினை பெற சபை அனுமதி தவிசாளரினால் கேட்கப்பட்ட நிலையில் பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டனால் சபை உறுப்பினர்கள் 12 பேரில் 1 உறுப்பினர் எதிராகவும் 5 பேர் ஆதரவாகவும் 6 உறுப்பினர்கள் நடுநிலை வகித்ததனால் குறித்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.பின்னர் அதனை தொடர்ந்து சில பிரேரணைகள் வாசிக்கப்பட்டதன் பின்னர் சபை நடவடிக்கைகள் யாவும் நிறைவடைந்தன.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

Pagetamil

மட்டக்களப்பில் காட்டுக்குள் அமைந்துள்ள பண்டைய வரலாற்று சின்னம்: உரிமை கோரும் பௌத்தர்கள்; கூட்டமைப்பினர் கள விஜயம்!

Pagetamil

மட்டக்களப்பு – கித்துள் வடிச்சல் ஆற்றை ஊடறுத்து இடம்பெறும் மணல் அகழ்வை நிறுத்தக்கோரி மீனவர்கள், விவசாயிகள் எதிர்ப்பு நடவடிக்கை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!