அதிகாலையிலேயே தேர்த் திருவிழாவை நடத்தி முடித்த அசால்ட் ஆறுமுகங்கள்; ஆதாரமில்லாமல் திண்டாடிய பிஎச்ஐ: இணையத்தில் வெளியான படங்களால் சிக்கினர்!

Date:

கெரோனா தொற்று அதிகரிக்கும் சூழ்நிலையில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் தேர் திருவிழாவை முன்னெடுத்ததாக தெல்லிப்பழை பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக சுன்னாகம் பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகாரித்து வரும் நிலையில் ஒன்றுகூடல் நிகழ்வுகளை தவிர்குமாறு அரசினால் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த 5 ஆம் திகதி, தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் தேர் திருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதி சுகாதாரப்பிரிவினருக்கு அறிவிக்காமல் அதிகாலையிலேயே இந்த திருவிழா முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சுகாதாரப்பிரிவினருக்கு முறைப்பாடு கிடைத்த போது அங்கு சென்ற சுகாதாரப்பிரிவினார் விசாரணைகளை மேற்கொண்டனர். ஆனால் தேர்திருவிழா நடந்ததா இல்லையா என மக்கள் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அதனால் ஆதாரம் எதுவும் அவர்களுக்கு சிக்கவில்லை.

இந்த நிலையில் குறித்த திருவிழாவின் ஒளிப்படக்காட்சிகள் இணையாத்தளம் ஒன்றில் 6 ஆம் திகதி பதிவேற்றப்பட்டுள்ளது. இதனை அவதானித்த சுகாதாரப்பிரிவினர் உடனடியாக கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் குறித்த கோவில் நிர்வாகத்தினருக்கு எதிராக தொல்லிப்பழை பொதுச்சுகாதாரப் பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்