யாழ் நகரை சுத்தம் செய்த இராணுவம்!

Date:

நாடு பூராகவும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கம் செயற்பாடு இன்றைய தினம் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் ராணுவத்தின் 51வது படைப்பிரிவு தளபதியின் நெறிப்படுத்தலில் ராணுவத்தின் 512வது பிரிகேட் இராணுவத்தினரால் யாழ்ப்பாண நகரப் பகுதி நீர் ஊற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

யாழ் நகரில் பொதுமக்கள் அதிகமாக ஒன்றுகூடும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், கஸ்தூரியார் வீதி, மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதி ஆகிய வீதிகள் இன்று காலை இராணுவத்தினரால் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் இராணுவத்தினரால் இவ்வாறான செயற்பாடு மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்