யாழில் இன்றும் முகக்கவசம் அணியாதவர்கள் அள்ளிச் செல்லப்பட்டனர்!

Date:

யாழ்ப்பாணம் மாநகரில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

முகக்கவசம் அணியாதோர், சமூக இடைவெளியைப் பேணாதவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோவின் அறிவுறுத்தலில் சிறப்பு நடவடிக்கை இன்று புதன்கிழமை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீதிகளில் மட்டுமல்லாமல் நிறுவனங்கள், வியாபார நிலையங்களுக்குள் சென்ற பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 50 பேரைக் கைது செய்து பேருந்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்கள் 50 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான வழக்கு வரும் ஜூலை 21,22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அழைக்கப்படும் என்று பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் எம்.பி வி.தர்மலிங்கம் நினைவு நிகழ்வு!

யாழ்ப்பாணம் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்...

தந்தை செல்வாவின் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்க!

தெல்லிப்பளையில் உள்ள தந்தை செல்வாவின் தூபி மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்திய...

எதிர்ப்பு குரல்களை முடக்குவதிலேயே என்.பி.பி மும்முரம்!

தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்