இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சிறந்த வீரர்கள்!

Date:

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்காத சிறந்த வீரர்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்து தங்கள் அணியில் இடம் பெறச் செய்த ஐபிஎல் அணிகள் அந்த வீரரை ஒரு போட்டியில் கூட பயன்படுத்தாத பட்டியல் குறித்து பார்க்கலாம். முதல் பாதி கட்ட தொடர் முடிந்த நிலையில் இவர்கள் பெரும்பாலான வீரர்கள் பெஞ்சிலேயே அமர்ந்திருந்தனர். இதில் ராபின் உத்தப்பா மற்றும் ஜேசன் ராய் உள்ளிட்ட வீரர்கள் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உத்தப்பா மாற்றம் செய்யப்பட்டார். ஜேசன் ராய் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த மிட்சல் மார்ஷுக்கு பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். ஜெகதீசன், சர்பராஸ் கான், ஆகியோரும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம், மிட்சல் சாண்ட்னர் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கில் ஓரளவு கை கொடுக்கும் தகுதி படைத்த வீரர்கள். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 13 விக்கெட்டுகள் மற்றும் 156 ரன்கள் எடுத்துள்ளார் கௌதம். இந்நிலையில் கிருஷ்ணப்பா கௌதமை வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதேபோல பவுலர்கள் பட்டியலில் ப்யூஸ் சாவ்லா, அன்ரிச் நார்ட்கே, உமேஷ் யாதவ் மற்றும் லூக்கி பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் ஒரு போட்டியில் கூட விளையாடாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்