ரஷ்ய நகரமான கசானில் உள்ள பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்ர் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நான்கு பேர் காயமடைந்தனர் என்று அவசர சேவை அமைச்சகத்தை மேற்கோளிட்டு RIA செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிலைமை குறித்து முரண்பட்ட அறிக்கைகள் வெளியாகியுள்ளன. சில ரஷ்ய செய்தி நிறுவனங்கள் இரண்டு டீனேஜ் துப்பாக்கிதாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டன. சில செய்தி நிறுவனங்கள், ஒருவர் தொடர்புபட்டதாக தெரிவித்தன.
RIA செய்தியின்படி ஒருவர் தாக்குதலுடன் தொடர்புபட்டார்.
தாக்குதலின் நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1