நோர்வூட் ஆடைத்தொழிற்சாலைக்கு பூட்டு

Date:

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளி ஆடைத்தொழிற்சாலையில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் மூலம் ஒன்பது பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து காலவரையறையின்றி மூடபட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்ததுள்ளனர்.

குறித்த ஆடைத்தொழிற்சாலை நோர்வூட் பிரதேச சபைத்தலைவரின் ஆலோசனைக்கமைய தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

நோர்வூட் தொழிற்சாலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த தொழிற்சாலையில் வேலை செய்யும் இருவர் மருந்து எடுப்பதற்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு சென்ற போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து 100 பேருக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்தே குறித்த ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தொழிற்சாலைகயில் 22 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் (11) 260 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அதனை தொடர்ந்து குறித்த தொழிற்சாலை தொடர்ந்து மூடுவதா இல்லையா என முடிவு செய்யப்படவுள்ளதாக சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே வேளை அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் நெருக்கமான உறவை பேணியவர்கள் 200 இற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

க.கிஷாந்தன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்