ரஞ்சனிற்கு சிறையில் தொலைக்காட்சி வசதி!

Date:

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பயன்படுத்துவதற்காக, பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் ​கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

தனக்கு பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று ​தேவையென ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கமையவே ,இது வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ரஞ்சன் ராமநாயக்கவின் பிரத்தி​யேக பயன்பாட்டுக்காக, ​மெத்தை, மின்விசிறி, குளியலறை வசதிகள் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரஞ்சன் ராமநாயக்க தனது பதவிக் காலத்தில் பயன்படுத்திய மாதிவெல உத்தியோகபூர்வ குடியிருப்பை மேலும் 6 மாதங்களிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க சமீபத்தில் தனது செயலாளர் மூலம் தனது உடமைகளை வைத்திருக்க சிறிது காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரியதாகவும், அவர் இந்த விஷயத்தை சபாநாயகருடன் விவாதித்து அந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சி விபத்தில் இளைஞன் பலி

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம்...

சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை? 51 வயது அதிகாரி கைது

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம்...

தமிழ் மொழியில் தேசிய முதலிடம்! 188 புள்ளிகளுடன் யாழ் மாணவன் சபின் சாதனை

புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தேசிய முதலிடம் –...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்