மாத்தளை, ரத்தோட்டை வனப்பகுதியில் அண்மையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வர்த்தகரின் சடலம் தொடர்பில் பொலிசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அழகான பெண்களிற்கு ஆசைப்பட்ட திருமணமாகாத தொழிலதிபர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.
தனது காதலியை தொழிலதிபர் பலவந்தமாக வசப்படுத்த முயற்சிப்பதால் ஆத்திரமடைந்த இளைஞன் ஒருவரே கொலையை செய்தார்.
ரத்வத்தை வனப்பகுதியின், டெம்பகொட பகுதி வனப்பகுதியில் தனது கால்நடைகளை மேய்க்க சென்ற பெண் ஒருவர், எரிந்த நிலையிலிருந்த சடலத்தை கண்டார். இது குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, விசாரணை ஆரம்பித்தது.
பாதி எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தின் கால் பகுதிகள் மீட்கப்பட்டிருந்தன.
மாத்தளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்த போதும், அந்த சடலம் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய முறைப்பாடு பதிவாகியுள்ளதா என பொலிசார் ஆராய்ந்தனர். அப்படியான முறைப்பாடுகளும் பதிவாகியிருக்கவில்லை.
விசாரணையை எந்த திசையில் நகர்த்துவது என பொலிசார் திண்டாடிக் கொண்டிருந்த போது, அநுராதபுரம் பொலிசாரிடமிருந்து ஒரு தகவல் வழங்கப்பட்டது.
அநுராதபுரம் நகரில் கைவிடப்பட்ட நிலையில் நீல நிற கார் ஒன்று காணப்படுவதாகவும், அது தொடர்பில் தாம் விசாரணை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து மாத்தளை குற்றத்தடுப்பு பிரிவினர் அநுராதபுரம் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
வாகனத்தின் பதிவு சான்றிதழ்கள் மூலம் உரிமையாளரை அடையாளம் காணும் பணியில் மாத்தளை பொலிசார் ஈடுபட்டனர்.
அந்த கார் வெல்லவாய பகுதியை சேர்ந்த பெண்ணொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, வெல்லவாய சென்று அந்த பெண்ணை பொலிசார் விசாரித்தனர்.
அந்த கார் பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அதனை அவரது தம்பி சந்தன திலக் ராஜபக்ச பயன்படுத்தியது தெரிய வந்தது. கட்டுமான நிறுவனமொன்றை நடத்தும் அவர் கொழும்பில் தங்கியிருப்பதும், மாதத்தில் 2 முறை மட்டுமே ஊருக்கு வருவதும், ஏப்ரல் 17ஆம் திகதியின் பின் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதையும் அந்த பெண் தெரிவித்தார்.
அந்த பெண்ணின் தகவல்களிற்கும், அடையாளம் தெரியாத சடலத்திற்கும் ஏதேனும் தொடர்பிருக்கலாமென பொலிசார் சந்தேகித்தனர். இதனால் சந்தன திலக் ராஜபக்ஷவின் அனைத்து மொபைல் தொலைபேசி எண்களையும் போலீசார் பெற்று விசாரணையைத் தொடங்கினர். சந்தனவின் கடைசி தொலைபேசி அழைப்பு ஏப்ரல் 17 அன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவரது செல்போன்கள் எதுவும் இயங்கவில்லை.
அப்படியானால், சந்தனவுக்கு விபத்து ஏற்பட்டதா? உடல் எரிக்கப்பட்டதா? பொலிசார் மேலும் விசாரணையை முடுக்கி விட்டனர்.
சந்தனவின் தொலைபேசிகளுக்கு அதிக அழைப்புகளை மேற்கொண்ட எண்களைக் கண்டுபிடித்து அழைப்பாளர்களைப் பின்தொடர பொலிசார் முடிவெடுத்தனர்.
கையடக்க தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையின்படி, சந்தனவின் கையடக்க தொலைபேசிக்கு அருண மற்றும் தசுன் ஆகியோரிடமிருந்து பெரும்பாலான அழைப்புகள் வந்தன. அருண பற்றிய தகவல்களை அவர்கள் தேடிய போதிலும், அவர் இருக்கும் இடத்தையோ அல்லது வசிப்பிடத்தையோ பொலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், பொலிசார் அருணவின் சகோதரரின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து, அவரிடம் விசாரிக்கத் தொடங்கினர்.
“அருண என் தம்பி. அவர் சந்தன ராஜபக்ஷவின் நிறுவனத்தில் பணிபுரிந்தார். தம்பியின் வீடு, மாத்தளை ரத்தோட்டையில் உள்ளது. அவர் அடிக்கடி அங்கு செல்கிறார். தம்பியை திருமணம் செய்யவிருந்த பெண் நதீகா. சந்தனவின் நிறுவனத்திலும் பணியாற்றினார். நதீகா நிட்டம்புவவில் வசிக்கிறார்“ என அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், நதீகாவை தேடி நிட்டம்புவ சென்றனர்.
நதீகா சுமார் 30 வயதான அழகான இளம் பெண். சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அருணவை சந்தித்தாள். நதீகாவின் கூற்றுப்படி, தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அருண நதீகாவை விட நான்கு வயது இளையவன். ஆனால் அந்த வயது இடைவெளி இருவருக்கும் இடையிலான உறவை பாதிக்கவில்லை. அருணாவை சந்தித்த போது நதீகா வேலையில்லாமல் இருந்தார். அப்போது அருண, சந்தன ராஜபக்ஷக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நதீகா தனதும், குடும்பத்தின் செலவிற்குமாக வேலையொன்றை தேடித் திரிந்தார்.
அருணவின் அறிமுகம் கிடைத்த பின், தனக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டாள். குறிப்பாக, அவன் பணிபுரியும் நிறுவனத்திலேயே முயற்சிக்குமாறு கேட்டாள்.
தனது முதலாளி சந்தனவிடம் இதை பேச ஆரம்பத்தில் அருண தயங்கினான். எனினும், நதீகாவின் வற்புறுத்தலை தொடர்ந்து, நிறுவனத்தின் உரிமையாளர் சந்தன ராஜபக்ஷவை சந்தித்து தனது தேவையை சொன்னார்.
“சரி, நீங்கள் திருமணம் செய்யப் போகும் பெண்ணாக இருந்தால், நான் உதவுகிறேன். விண்ணப்பத்தை எனக்கு அனுப்புங்கள். நான் ஏதாவது வேலையை ஏற்பாடு செய்கிறேன்”என்று சந்தன கூறினார்.
சந்தனவுக்கு 46 வயது, திருமணமாகாதவர். கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனத்தின் உரிமையாளரான சந்தன ஒரு நல்ல தொழிலதிபர். அழகான பெண்களுடன் பழகுவது சந்தனவுக்கு மிகவும் பிடிக்கும். பல ஆண்டுகளாக சந்தனவின் நிறுவனத்தில் பணியாற்றிய அருணவிற்கு, தனது முதலாளியை பற்றி நன்கு தெரியும். அவருக்கு பல பெண் தொடர்பிருந்தது.
இதனாலேயே நதீகா அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர அருண தயங்கினான். எனினும், இறுதியில், நதீகாவின் விருப்பப்படியே, சந்தனவின் நிறுவனத்தில் பணியாற்றினாள்.
நதீகா விரைவில் அந்த நிறுவனத்தில் சிறந்த பணியாளராக இருந்தார். நிறுவனத்தில் உள்ள அனைத்தையும் நதீகாவிடம் சந்தன சொன்னார். நிட்டம்புவவிலிருந்து வரும் நதீகா, தினசரி போக்குவரத்தினால் சிரமப்பட்டார்.
இதனால் காலையில் 7.30 மணிக்கு பணிக்கு வந்து மாலையில் சற்று நேரத்துடனேயே கிளம்பட்டுமா, கடைசி பேருந்தை பிடிப்பதில் சிரமமுள்ளது. அதை தவறவிட்டால் நீண்டதூரம் நடக்க வேண்டும் என சந்தனவிடம் கோரிக்கை விணடத்தார்.
ஆனால் சந்தன அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
இரவு வரை நதீகாவை தனது நிறுவனத்தில் வைத்து பல்வேறு கடமைகளை செய்யும்படி வற்புறுத்துவார். பின்னர், தனது காரில் அவரை நிட்டம்புவ அழைத்து செல்ல ஆரம்பித்தார். எனினும், அருணவுடன் காதலுறவு இருந்ததால் இந்த பயணங்களை நதீகா விரும்பவில்லை.
கார் பயணங்களின் போது நதீகாவுடன் அத்துமீறி நடந்திருந்தார் சந்தன.
இந்த சம்பவங்களின் பின் தான் வேலைக்கு செல்லவில்லையென்றும், அருண பின்னர் தன்னை தொடர்பு கொள்ளவில்லையென்றும் தெரிவித்தார்.
போலீசார் அருணாவின் மொபைல் போன் எண்ணை எடுத்து நடீகாவிடம் விடைபெற்றனர், தேவைப்பட்டால் அவர் திரும்பி வருவார் என்று தெரிவித்தார்.
தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் அருணவை கைது செய்ய போலீசார் நடவடிக்கையை தொடங்கினர். அருணவின் கைய்க்க தொலைபேசி லக்கல பகுதி கோபுர பகுதியில் இயங்குவதை கண்டறிந்து, அவரை பொலிசார் கைது செய்தனர்.
கைதான பின்னர், விடயத்தை மறைத்து பலனில்லையென்பதை தெரிந்த அருண உண்மையை கக்கினார்.
“ஐயா … நான் நதீகாவை மிகவும் நேசித்தேன். நான் அவரை திருமணம் செய்ய போகிறேன். பணத் தேவை காரணமாக எங்கள் நிறுவனத்தில் அவரை வேலைக்கு சேர்த்தேன். ஆனால் இந்த பாவி என்னிடமிருந்து என் நதீகாவை பறிக்க முயன்றார்் என அனைத்து தகவலையும் வெளிப்படுத்தினார்..
சந்தன ராஜபக்ஷ நீண்ட காலமாக கட்டுமானத் தொழில் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கட்டுமான ஒப்பந்தங்களைப் பெற்றிருந்தார். தலங்கம பகுதியில் ஒரு வீட்டில் சந்தன தங்கியிருந்தார். திருமணமாகாதவர் என்றாலும், அவர் பல அழகான இளம் பெண்களுடன் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். திருமணமான அழகான பெண்களுடனும் உறவை பேணினார்.
அந்த பெண்களிற்காக பெருந்தொகை பணத்தை செலவிட்டார். திருமணமான வசதியான பெண்களிடமிருந்து பண்த்தை பெற்றார்.
சந்தன தனது நிறுவனத்தில் வேலைக்கு வந்த நதீகாவுடன் ஒரு உறவை உருவாக்க முயன்றார். ஆனால் அவள் அருணவை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தாள். சந்தனவின் வித்தைகள் அவளிடம் பலிக்கவில்லை. இதனால்தான், அவளை இரவு நேரத்தில் பணிக்கமர்த்தி, தன்னுடைய காரில் வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றார்.
இதற்கிடையில், சந்தனவின் நிறுவனத்தின் அலுவலக கட்டிடம் இடமாற்றம் செய்யப்பட்டது. சந்தன தனது நெருங்கிய ஊழியரான அருணவையும் புதிதாக கட்டப்பட்ட அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்களை நிறுவவும், அதை உள்ளே அமைக்கவும் அழைத்துச் சென்றார். அது ஏப்ரல் 17 அன்று. சந்தன, அருண ன்று அலுவலகத்தை நிர்மாணித்துக்கொண்டிருந்தார்.
இதன்போது சந்தன. நதீகாவை பற்றி கேள்வி எழுப்பினார்.
ஆனால் அதற்கு எகத்தாளமாக பதிலளித்த சந்தன, தன்னிடம் நிறைய பணமிருப்பதாகவும், ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு ஒதுங்கி விடுமாறும், அல்லது பாதாள உலகக்குழுக்கள் மூலம் ஆளை இல்லாமல் செய்து விடுவேன் என்றும் சந்தன மிரட்டினார்.
இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றி, சச்சரவாக மாறியது. கூர்மையான ஆயுதமொன்றை எடுத்துக் கொண்டு அருணவை நோக்கி பாய்ந்தார் சந்தன.
அருண முன்னர் இராணுவத்தில் பணியாற்றியவர். வலிமையான அவர், சந்தனவை தடுத்து, கூரிய ஆயுதத்தை பறித்தெடுத்தார். அருண உதைந்ததில் சந்தன தரையில் விழுந்தார்.
கூரிய ஆயுதத்தினால் சந்தனவின் கழுத்தில் குத்தினார். அப்போது சி.சி.டி.வி கமராக்களை நிறுவ அழைக்கப்பட்ட விமலும் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தார். விமல் அருணவின் நெருங்கிய நண்பர். அவரும் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர். பல்வேறு தொழில்களை செய்து வந்தார்.
சந்தனவை ஏன் குத்துகிறாய் என அருணவிடம் கேட்டார். மறுபேச்சு பேசாமல் சந்தனவின் கால்களை பிடிக்குமாறு அருண சொன்னான். விமல் கால்களை பிடித்தான். சந்தனின் கழுத்து வெட்டப்பட்டது.
உடனடி கோபத்துடன் நடந்த குற்றத்தின் தீவிரத்தை அருண அப்போதுதான் உணர்ந்தான்.
சந்தனவின் உடலை அலுவலக கட்டிடத்தில் உள்ள ஒரு அறைக்கு இழுத்து, சென்றனர். பின்னர் விமலுடன் அருணவும் சந்தனவின் காரில் ஏறி குருநாகலில் உள்ள பட்டறைக்குச் சென்றனர். என்ன செய்வது என்று அவனால் யோசிக்க முடியவில்லை.
மீண்டும் இருவரும் தலங்கம அலுவலக கட்டிடத்திற்கு வந்தனர்.
சந்தனவின் உடலை காரில் ஏற்றிக் கொண்டு மாத்தளை, ரத்தோட்ட பகுதிக்கு கொண்டு செ்றனர். உக்குவளையில் பெற்றோல் வாங்கினர்.
அருணவும் விமலும் சந்தனவின் உடலை ஒரு காட்டுப் பகுதியில் போட்டு, தீ வைத்துக் கொண்டனர். சந்தனவின் உடல் முற்றாக எரிந்து சாம்பலாகும், இந்த குற்றத்தை மறைத்து விடலாம் என நினைத்து அந்த பகுதியிலிருந்து புறப்பட்ட சென்றனர். எனினும், அவர்கள் அனைவரும் இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.
.
.




