கொரோனா தொற்று பரவலை தடுக்க இன்று முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், தடைகளை மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 24ம் தேதி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இன்று காலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அத்தியாவசிய கடைகளை தவிர்த்து பிற அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அவசர தேவைகளை தவிர்த்து பிற தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியேவர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, நகரின் எல்லையில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். வாகனங்களில் முகக்கவசமின்றி வெளியே சுற்றுபவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்தும், அபராதமும் விதித்து வருகின்றனர். ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளில் சமூக இடைவெளி உட்பட கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.