கேட்டதை விட குறைவாக ஒக்சிஜன் வழங்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவிப்பு!

Date:

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒக்சிஜன் தட்டுப்பாடு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டெல்லியில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் இறக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஒக்சிஜன் ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இன்று டெல்லிக்கு 488 மெட்ரிக் டன் ஒக்சிஜன் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

மே 7 நிலவரப்படி டெல்லியில் 212 மெட்ரிக் டன் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் ஒக்சிஜன் தேவை சராசரியாக 700 மெட்ரிக் டன்னாக இருப்பதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு நாட்களாக சராசரியாக 522 மெட்ரிக் டன் ஒக்சிஜன் மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நெருக்கடியை சமாளிக்க முடியாமல் டெல்லி திணறி வரும் நிலையில் மத்திய அரசு போதிய அளவு ஒக்சிஜன் வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஐநூறு போதை மாத்திரைகளுடன் சிஜடியினரால் யாழில் இருவர் கைது

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,...

செம்மணி புதைகுழி விவகாரம்: ராஜ் சோமதேவவின் விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரும் அமெரிக்கத் தமிழர் அமைப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்