நல்லூரடி ஆதனத்திற்கு எல்லையிட்ட மாநகரசபை!

Date:

யாழ்.மாநகர சபையின் அனுமதி பெறப்படாமல் , அதன் ஆதனத்திற்குள் அத்துமீறி நடைபெறும் செயற்பாடுகளை தவிர்க்கும் நோக்குடன் குறித்த ஆதனம் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய பின் பகுதியில் பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான ஆதனம் காணப்படுகின்றது.

குறித்த ஆதனம் இதுவரை காலமும் அறிக்கையிடப்படாமல் திறந்த வெளியாக காணப்பட்டன. அப்பகுதியில் சில வர்த்தக நிறுவனங்கள் மாநகர சபை அனுமதியுடன் உரிய குத்தகை பணம் செலுத்தி தமது பொருட்களின் வியாபார மற்றும் விளம்பர நோக்கங்களுக்கு பயன்படுத்தினர்.

இதேவேளை சிலர் அவ்வாதனத்திற்குள் அத்துமீறி செயற்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த ஆதனத்தை அறிக்கைப்படுத்தி பாதுகாக்கும் நோக்குடன் மாநகர சபை அனுமதியின்றி எவரும் உட்செல்ல முடியாதவாறு ஆதனத்தை சூழ முட்கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“எம்.எஸ்.வி முதல் அனிருத் வரை பாடிய கானகோகிலம்” – எஸ்.ஜானகி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

இந்திய திரையுலகின் புகழ்பெற்ற பாடகரான எஸ்.ஜானகி மறைவுக்கு முன்னாள் முதல்வரும் திமுக...

திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி மறைவு

இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி காலமானார். அவருக்கு வயது 88....

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்