யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கல்வியங்காடு பொதுச்சந்தை சீல் வைக்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறையை மீறி செயற்பட்டதால் இந்த நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளது.
மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி பேணாமல் செயற்பட்ட நிலையில், பொதுச்சுகாதார பரிசோதகர் பலமுறை அறிவுறுத்தியும் அதை வியாபாரிகள் கணக்கெடுக்கவில்லை.
இதையடுத்து மறு அறிவித்தல் வரை சந்தை மூடப்பட்டுள்ளது.




