வயிற்றை கிழித்து கன்றை வீசிவிட்டு பசுவை இறைச்சியாக்கிய கொடூரர்கள்: வடமராட்சியில் களைகட்டும் கள்ளமாடு வியாபாரம்!

Date:

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை தெற்கில் சட்டவிரோத மாடறுப்பு கொடிகட்டி பறக்கிறது. மாடுகளை திருடி, சட்டவிரோதமாக இறைச்சியாக்கி விற்பனை செய்பவர்கள் இந்த பகுதியில் எந்த தடையுமின்றி இயங்குவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கன்று ஈனும் நிலையிலுள்ள பசு மாட்டையும் திருடி வந்த தொடர்ந்து இறைச்சியாக்கி வருகிறார்கள்.

அந்த பகுதியில் பிள்ளையார் ஆலயமொன்றுள்ளது. ஆலயத்தின் முன்பகுதியிலேயே சட்டவிரோத மாடறுப்பு இடம்பெற்று வருகிறது.

நேற்று, கன்று ஈனும் நிலையிலிருந்த பசு மாடு ஒன்றை திருடி வந்து, சட்டவிரோதமாக இறைச்சியாக்கியுள்ளனர். பசுவின் வயிற்றிலிருந்த கன்றை, அந்த பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

அச்சுவேலி, வல்வெட்டித்துறை, மந்திகை, நெல்லியடி, கோவில்சந்தை, கரணவாய் பகுதிகளிலுள்ள மாட்டிறைச்சி கடைகளை இந்த பகுதியிலுள்ளவர்களே நடத்தி வருகிறார்கள்.

இந்த பகுதியில் சட்டவிரோத மாட்டிறைச்சி தொழில் கொடிகட்டி பறப்பதன் பின்னணி காரணம் இதுதான் என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று கட்டவிரோதமாக அறுக்கப்பட்ட பசு மாட்டின இறைச்சி வல்வெட்டித்துறை பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மாடுகளை திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்பவர்களால் கால்நடை வளர்ப்பவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பகுதியிலுள்ள மாட்டு திருடர்கள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதுடன், உரிமம் பெற்ற மாட்டிறைச்சி கடைகளிற்கு கொண்டு செல்லப்படும் இறைச்சி தொடர்பில் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

சீனாவில் காலணி தொழிற்சாலை தீவிபத்தில் 28 பேர் பலி

கிழக்கு சீனாவில் வியாழக்கிழமை ஒரு காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்...

பாலியல் குற்றச்சாட்டில் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் தேசிய பட்டியல் ஊடாக காத்தான்குடி நகர...

அறிவுசார் சொத்துரிமையை மீறிய விமல் ரூ.10 இலட்சத்தை இழப்பீடாக வழங்க உத்தரவு

'இல்லை என்பதற்குப் பதிலாக உண்மை' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டதன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்