தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் வசூலில் ஓரளவு பரவால்லை. தற்போது விஜய் 65 படத்தை தொடர்ந்து அடுத்த படமான விஜய் 66 படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான் மீண்டும் இயக்கபோவதாக தெரிகிறது.
சரி தளபதி 66 படத்தை விட்டுவிட்டு தளபதி 65 படத்திற்கான தகவலை சொல்றோம். ஜார்ஜியா சென்று பத்து நாட்களுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக “அப்புறம் பார்த்துக்கலாம் பாஸ்” என்று விஜய் செல்லமாக உத்தரவு போட்டுவிட்டார். தற்போது சென்னை திரும்பியுள்ள விஜய், வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறார்.

இப்படி குடும்பத்தோடு நேரம் செலவிடும் விஜய்க்கு, ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மவுசு அதிகம். ஆனால் பேமிலி ஆடியன்ஸ்க்கு அறவே பிடிக்காத செல்வராகவனும் விஜயும் கூட்டணி அமைத்தால்? …. பதற வேண்டாம், விஜய்யின் 65வது படத்தை செல்வராகவன் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இதைப்பற்றி அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வரவில்லை. இருந்தாலும் இந்த தகவலை கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் தான் இருக்கிறார்கள். இப்போது செல்வராகவன் சாணிகாயிதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.




