கிளிநொச்சி மாவட்டத்தில் 230 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை
நிலையம் இன்று(07) முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது.
ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம்
வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக
மலையாளபுரம் கிராமத்தில் இதுவரை காலமும் இராணுவ வைத்தியசாலையாக இருந்து
வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழ்
செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




