இலங்கையில் நேற்று (6) மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 745 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம்-
இனாமலுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய பெண் ஒருவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் வெலிகந்த விசேட சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரகம் செயலிழந்தமை மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், குருநாகல் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவால் இதயநோய் நிலைமை மற்றும் அவையவங்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கட்டுவன பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய பெண் ஒருவர், கட்டுவன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எம்பிலிப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 02 ஆம் திகதியன்று கொவிட் 19 நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.
பெந்தோட்டை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 55 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் உந்துகொட மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 06 ஆம் திகதியன்று கொவிட் நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.
சீதுவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய பெண் ஒருவர், வெலிசற மார்புச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் மே 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். உக்கிரமான சுவாசக் கோளாறு மற்றும் கொவிட் நிமோனியா நிலைமையே காரணங்காளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
மல்லவகெதர பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 78 வயதுடைய பெண் ஒருவர், மொரட்டுவ மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். இதயநோய் மற்றும் கொவிட் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கெலிஓயா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய ஆண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதியன்று கொவிட் நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே 05 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். சுவாசக் குழாய் தொற்றுடன் குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் இடது காலின் கீழ்ப் குதியில் ஏற்பட்ட காயம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
உடவளவை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், எம்பிலிப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலுதொட்ட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 43 வயதுடைய ஆண் ஒருவர், கொலொன்ன ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் எம்பிலிப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் ஏப்ரல் 29 ஆம் திகதியன்று கொவிட் நிமோனியா நிலைமையால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 03 (கொள்ளுப்பிட்டி) பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 81 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 05 ஆம் திகதியன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா, உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.