அண்ணாத்த படமே தன் கடைசி படமாக ஆகிவிடுமோ என பயந்த ரஜினிகாந்த்-அடுத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்!

Date:

அண்ணாத்த படமே தன் கடைசி படமாக ஆகிவிடுமோ என்று ரஜினிகாந்த் பயந்த நிலையில் அவரின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஈசியான கேள்விகளுக்கு பதில் சொல்லி மிகப்பெரிய பரிசுகளை வெல்லலாம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்து பேச்சு கிளம்பியிருக்கிறது. தலைவர் 169 என்று அழைக்கப்படும் அந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன் வந்திருக்கிறதாம். ரஜினி தற்போது நடித்து வரும் அண்ணாத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்கிறது.

ரஜினி, சன் பிக்சர்ஸ் நிறுவனம் நான்காவது முறையாக கூட்டணி சேரவிருக்கிறார்கள். புதுப் படத்தின் இயக்குநரை முடிவு செய்த பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுமாம்.

ரஜினியின் அடுத்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் புகழ் தேசிங்கு பெரியசாமி தான் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்று ட்வீட் செய்திருக்கிறார் பெரியசாமி.

தேசிங்கு பெரியசாமி இயக்காவிட்டால் கார்த்திக் சுப்புராஜுக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று பேச்சு கிளம்பியிருக்கிறது. முன்னதாக ரஜினியை வைத்து பேட்ட படத்தை கொடுத்தவர் கார்த்திக் சுப்புராஜ்.

கடந்த டிசம்பர் மாதம் ரஜினிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ரஜினி தன் உடல்நலனை நினைத்து கவலையில் இருந்ததாக கூறப்பட்டது.

கண் கலங்கிய ரஜினி, பதறிய நண்பர்கள்: நடந்தது என்ன?
அண்ணாத்த படமே என் கடைசி படமாகிவிடக் கூடாது என்று தன் நண்பர்களிடம் கூறினாராம். மேலும் தொடர்ந்து புதுப் படங்களில் நடிக்க முடிவு செய்தாராம். இந்நிலையில் தான் அவரின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.

இதற்கிடையே அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை ஒரு குழந்தையை பார்த்துக் கொள்வது போன்று பார்த்துக் கொள்கிறார்களாம். ரஜினிக்கு அருகே யாரும் செல்லக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளனர். இயக்குநர் சிவா கூட ரஜினி அருகே செல்வது இல்லை.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் மிரட்டிய சீன ரௌடி கைது!

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்ய வருபவர்களை அச்சுறுத்தி பணம்...

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்