கறிச்சட்டிக்குள் விழுந்தவர் மரணம்!

Date:

யாழ்.பருத்துறையில் வலிப்பு காரணமாக கறிச்சட்டிக்குள் விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.

பருத்தித்துறை, மந்திகை, சாவகச்சோி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அல்வாய் வடக்கை சேர்ந்த இராசையா தீபன்குமார் (41) என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த ஞாயிற்றுக் கிழமை சமையல் பணியில் ஈடுபட்டிருந்தார். திடீரென வலிப்பு வந்ததால் அவர் கொதித்துக் கொண்டிருந்த கறிச் சட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார்

சக பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை மரணமானார்.

இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ச.சிவராசா நடத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

மனைவியின் தங்கையில் கண் வைத்த இராணுவச்சிப்பாய் கைது!

தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த...

வெளிநாட்டுக்கு தப்பியோடிய நீதிமன்ற உத்தியோகத்தர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சலிந்து மல்சித...

நாமலுக்கு விளக்கமறியல்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்