வடக்கிலுள்ள வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்கள் ஆகியோர் இந்த கலந்துரையாடல் நடந்தது.
வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சை வசதிகளையும், படுக்கை வசதிகளையும் மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் உள்ள எந்த வைத்தியசாலையிலும் சாதாரண சுவாச சிக்கலுள்ள கொரோனா நோயாளிகளிற்கும் சிகிச்சையளிக்க வசதியில்லை. இதனால், வைத்தியசாலை வசதிகளை மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாங்குளத்தில் கொரோனா வைத்தியசாலையொன்றை அமைக்க திட்டமிடப்பட்ட போதும், தென்னிலங்கை நோயாளர்களை சிகிச்சைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக கூறிய சர்ச்சையையடுத்து, அது இடைநிறுத்தப்பட்டதுடன், வடக்கிலுள்ள தீவிர நோயாளர்கள் தொடர்ந்து தெற்கிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில், வடக்கிலுள்ள நோயாளர்களை வடக்கிலேயே வைத்து சிகிச்சையளிக்கவும், தேசிய கொள்கையின் அடிப்படையின் வெற்றிடமாக உள்ள விடுதிகளில் நாட்டின் வேறெந்த பகுதியிலாவது அதிகரித்த நோயாளர் இருப்பின், அவர்களை அனுமதித்து சிகிச்சையளிக்கவும் இந்த அவசர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.