30.7 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

முஸ்லிம்களுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 2 நல்லெண்ண நடவடிக்கையும் பலனில்லாமல் போனது; இனி முறையாக பேசியே செயற்படுவோம்: த.சித்தார்த்தன்!

கல்முனை பிரதேச செயலக விவாகரத்தில் தமிழ் முஸ்லீம் உறவை வளர்க்கும் விதமாக முஸ்லிம் காங்கிரஸ் நடந்து கொள்ளவில்லை. இரு சமூகத்திற்கும் இடையிலான பிரிவை மேலும் அதிகரிக்கும் விதமாக செய்யப்பட்டார்கள். கல்முனையை ஒரு பிரதேச செயலகம் தரம் உயர்த்தக் கூடாது என செயற்பட்டார்கள். இந்த அரசாங்கத்திலும் ஏதோ ஒரு விதத்தில் அழுத்தத்தைக் கொடுத்து அதன் தரத்தை இறக்குவதற்காக செய்யப்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாக தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன்.

தமிழ் முல்ஸிம் உறவை வளர்க்க வடமாகாணசபையில் அஸ்மினை உறுப்பினராக நியமித்ததும், கிழக்கில் நசீரை முதலமைச்சராக்கியதும் பயனில்லாத நடவடிக்கைகளாகவே முடிந்தன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நேற்று (3) யாழ்ப்பாணம் கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில்  நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு, எந்த முஸ்லிம் கட்சிகளுடனோ, தமிழ் கட்சிகளுடனோ மாகாணசபை தேர்தல் பற்றி உத்தியோகபூர்வமாக பேச்சு நடத்தவில்லை. முக்கியமாக முஸ்லிம் காங்கிரசுடன் எந்த பேச்சும் நடத்தப்படவில்லை.

முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு நடத்துவதற்கு முன்னர் கடந்த காலத்தை நாம் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்துவதற்காக வடமாகாண சபையில் அஸ்மினை முதல் முதலில் ஒரு அங்கத்தவராக கொண்டு வந்தார்கள். தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பதில் அவரால் எந்த ஒரு லாபமும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை.  அடுத்ததாக கிழக்கு மாகாண சபையில் எமக்கு 11 அங்கத்தவர்களும், முஸ்லிம் காங்கிரசுக்கு 7 அங்கத்தவர்களும் இருந்தபோதுகூட நசீர் முதலமைச்சராக வருவதற்கு நாம் ஆதரவளித்தோம்.

கல்முனை பிரதேச செயலக விவாகரத்தில் தமிழ் முஸ்லீம் உறவை வளர்க்கும் விதமாக அவர்கள் நடந்து கொள்ளவில்லை. இரு சமூகத்திற்கும் இடையிலான பிரிவை மேலும் அதிகரிக்கும் விதமாக செய்யப்பட்டார்கள். கல்முனையை ஒரு பிரதேச செயலகம் தரம் உயர்த்தக் கூடாது என செயற்பட்டார்கள். இந்த அரசாங்கத்திலும் ஏதோ ஒரு விதத்தில் அழுத்தத்தைக் கொடுத்து அதன் தரத்தை இறக்குவதற்காக செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ் முஸ்லீம் உறவு என்பது மிக முக்கியம் சிறுபான்மை இனங்கள் நாங்கள் ஒற்றுமைப் பட்டால்தான் வடக்கு கிழக்கில் நியாயமான அதிகாரப் பரவலாக்கலை பெறமுடியும். இதெல்லாம் உண்மையாக இருக்கின்ற போது கூட முஸ்லிம் கட்சிகளுடன் சரியான விதத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான முறையில் இணக்கப்பாடுகள் ஏற்படுத்த வேண்டும்.

அதைவிட முக்கியமா பிரச்சனை, இரண்டு தரப்பும் ஒன்றிணைந்து போட்டியிடுவதென்றால் கூட, ஒரே சின்னத்தில் போட்டியிடுவது சாத்தியமில்லை. வீட்டுச்சின்னத்தில் போட்டியிட முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மரச்சின்னத்தில் போட்டியிட தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி கேட்டால் இரண்டு தரப்பும் தோல்வியடைய வேண்டும்.

இதையெல்லாம் ஆராய்ந்து, நியாயமான அடிப்படைகள் இருந்தால்தான் அறிவிக்கலாமே தவிர, அதெல்லாம் இல்லாமல் இணையப் போகிறோம் என அறிவிப்பது அரசியல் அறிவான செயல்ல என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இலங்கைக்கு பெரு வெற்றி

Pagetamil

Leave a Comment