Pagetamil
இந்தியா

கொரோனாவை எதிர்கொள்ள 1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஒக்சிஜன்: 20 ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்தன!!

76 டேங்கர்களில் 1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஒக்சிஜனை 20 ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே கொண்டு சேர்த்து வருகிறது.
இதுவரை 76 டேங்கர்களில் 1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஒக்சிஜனை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. 20 ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏற்கனவே பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், 27 டேங்கர்களில் சுமார் 422 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஒக்சிஜனுடன் கூடுதலாக 7 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றன.

ஒக்சிஜன் தேவைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ள மாநிலங்களுக்குக் குறுகிய காலத்தில் இயன்ற அளவு அதிக திரவ மருத்துவ ஒக்சிஜனை கொண்டு சேர்ப்பதில் இந்திய ரயில்வே முனைப்பு காட்டி வருகிறது. துர்காபூரிலிருந்து 120 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஒக்சிஜனுடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், மே 4ம் தேதி அங்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 60.23 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் ஆக்சிஜன் தெலங்கானாவிற்குக் கிடைக்கும்.

சுமார் 72 மெட்ரிக் டன் மருத்துவ ஒக்சிஜனுடன் நான்கு மற்றும் ஐந்தாவது ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரிசா மாநிலத்தின் அங்குல், ரூர்கேலாவிலிருந்து ஹரியாணாவிற்குக் புறப்படும். 422.08 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் ஒக்சிஜனுடன் கூடுதலாக 7 ஒக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, தில்லி மற்றும் ஹரியானாவிற்கு பயணித்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரை சுமார் 1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஒக்சிஜனை மகாராஷ்டிரா (174 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (430.51 மெட்ரிக் டன்), மத்தியப் பிரதேசம் (156.96 மெட்ரிக் டன்), தில்லி (190 மெட்ரிக் டன்), ஹரியாணா (109.71 மெட்ரிக் டன்), தெலங்கானா (63.6 மெட்ரிக் டன்) ஆகிய மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே அனுப்பியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கவிஞர் நந்தலாலா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Pagetamil

விஜயலட்சுமியுடன் சமரசம் செய்ய அவகாசம்: சீமான் மீதான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

Pagetamil

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தொடர் உணவுத்தவிர்ப்பு போராட்டம்

Pagetamil

மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் பலி

Pagetamil

சம்மன் கிழிப்பு முதல் காவலாளி கைது வரை: சீமான் வீட்டில் நடந்தது என்ன?

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!