தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை பார்த்த குஷ்பு திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை பார்த்தவர்கள் அவர் மீண்டும் கட்சி தாவ தயாராவதாக பேசத் துவங்கிவிட்டனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக பெரும்பான்மை பெற்றுள்ளது. இதையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகிறார்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட குஷ்பு தோல்வி அடைந்துள்ளார். தேர்தல் முடிவுகளை பார்த்த அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நம் அழகிய மாநிலமான தமிழ்நாட்டை மேலும் சிறப்பானதாக்க புது அரசுக்கு ஆதரவாக இருப்போம். அறிவாலயம் மற்றும் அதன் தலைவர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. தேர்தல் வரும் போகும், நற்பணி தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குஷ்புவின் வீட்டை திமுக ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது,
கலைஞர் இறந்த பிறகு திமுக அவ்வளவு தான் என்பது இந்த உலகிற்கு தெரியும் என ட்வீட் செய்த குஷ்பு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கிறார் என்பதை நம்பவே முடியவில்லை. என்ன மேடம், தமிழகத்தில் அனைத்து தெருக்களிலும் தாமரை மலரும் என்றீர்களே. ஒருபோதும் மலராது. திமுகவில் இருந்திருந்தாலாவது இந்நேரம் எம்.எல்.ஏ. ஆகியிருக்கலாம். அடிக்கடி கட்சி தாவாதீர்கள். மக்கள் உங்களை நம்ப மாட்டார்கள்.
நீங்கள் வாழ்த்து தெரிவித்திருப்பதை பார்த்தால் மீண்டும் திமுகவுக்கு தாவ ஐடியா போடுவது மாதிரி தெரிகிறதே. எதுக்கும் உதவும், துண்டை போட்டு வைப்போம் என்று நினைக்கிறார் குஷ்பு.
இது தமிழ்நாடு மேடம், பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளனர்.
குஷ்புவின் ஆதரவாளர்களோ, நல்ல மனதுடன் அவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதை பார்த்துவிட்டு அவரை பற்றி தவறாக பேச வேண்டாம். எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவர் ஏன் மீண்டும் திமுகவுக்கு போகப் போகிறார் என கூறியுள்ளனர்.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியிலேயே இருந்திருந்தால் எம்.எல்.ஏ. ஆகியிருக்கலாம் குஷ்பு என சிலர் கமெண்ட் போட்டுள்ளனர்.