29.5 C
Jaffna
April 19, 2024
லைவ் ஸ்டைல்

தூங்கும் பொழுது ஏன் இடது பக்கத்தில் தூங்க வேண்டும்?

இடது பக்கத்தில் ஏன் தூங்க வேண்டும்? எவ்வாறு படுத்து தூங்க வேண்டும்? இடது பக்கத்தில் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் எப்படி தூங்குவது?

அண்ணார்ந்து அல்லது மல்லார்ந்து தூங்குபவர்கள், குப்புற படுத்து தூங்குபவர்கள், மற்றும் உங்களின் வலது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் ஆகிய அனைவரும் இனிமேல் அப்படி தூங்குவதை தவிர்க்கவும். இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த பதிவை தவறாமல் படியுங்கள்

நாம் அனைவரும் நம் இடது பக்கத்தில் தூங்குவது தான் மிகவும் நல்லது. எனவே, அண்ணார்ந்து அல்லது மல்லார்ந்து தூங்குபவர்கள், குப்புற படுத்து தூங்குபவர்கள், மற்றும் உங்களின் வலது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் ஆகிய அனைவரும் இனிமேல் அப்படி தூங்குவதை தவிர்க்கவும். மேலும், இடது பக்கம் தூங்குவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

​குறட்டையை குறைக்க உதவுகிறது

இரவு தூங்கும் பொழுது நீங்கள் விடும் குறட்டையை கண்டு உங்கள் கணவரோ அல்லது உங்கள் குடும்பத்தாரோ உங்களை கேலி செய்கிறார்களா? அல்லது உங்கள் குறட்டையால் அவர்களின் தூக்கம் கெடுகிறது என்று உங்களிடம் புகார் கூறுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்! உங்களின் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்களின் குறட்டையை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.

குறிப்பாக, நீங்கள் மல்லார்ந்து படுத்து தூங்கும் போது, நீங்கள் இன்னும் சத்தமாக குறட்டை விடுவீர்கள். ஏனென்றால், நீங்கள் தூங்கும் போது உங்கள் நாக்கு, வாய் மற்றும் தாடை ஆகியவை எந்தவித அசைவும் இன்றி முற்றிலும் தளர்வாக இருக்கும், எனவே நீங்கள் மல்லார்ந்து படுத்து தூங்கும் போது உங்களுக்கு குறட்டை ஏற்படுகிறது.

​இது நெஞ்சு எரிச்சலுடன் போராட உதவுகிறது!

நீங்கள் தூங்கும் நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் இந்த நெஞ்சு எரிச்சல், இரவு முழுவதும் கூட நீடிக்கக்கூடும். ஆகையால் தான், நிபுணர்கள் நீங்கள் உங்களின் இடது பக்கத்தில் தூங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். மேலும், அவ்வாறு செய்கையில் அந்த எரிச்சல் உணர்வை அது குறைக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

​உங்களின் இதயத்திற்கும் நன்மை பயக்கும்.

உங்கள் இடது பக்கத்தில் தூங்குவதன் மூலம் உங்கள் இதயத்தின் கடின உழைப்பைக் நீங்கள் குறைக்கலாம்; அதாவது உங்கள் இதயம் கடினமாக செயல்படுவதை நீங்கள் தவிர்க்கலாம். நீங்கள் இவ்வாறு இடது பக்கம் படுத்து தூங்கினால், உங்கள் இதயத்திற்கு, உங்களின் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை பரப்புவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும்.

கர்ப்பிணிப் பெண்களும் இடது பக்கம் தூங்குவது நல்லது

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் இடது பக்கத்தில் தூங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? அதாவது, உங்கள் வலது பக்கத்தில் நீங்கள் தூங்கினால், உங்கள் கருப்பை ஆனது உங்கள் கல்லீரலுக்கு எதிராக அழுத்தப்படுகிறது (கல்லீரல் ஆனது, உங்கள் உடலின் வலது பக்கத்தில் காணப்படுகிறது).

​நிணநீர் நாளங்கள் செயல்பட

உங்கள் நிணநீர் கூட நீங்கள் இடது பக்கம் தூங்குவதால் பயனடைகிறது. இது உங்களுக்கு தெரியுமா? அது மட்டுமின்றி, உங்கள் உடல் வழியாக திரவங்களை விரைவாக வெளியேற்றவும் இது உதவுகிறது. மாறாக, நீங்கள் உங்களின் வலது பக்கத்தில் தூங்கினால், உங்கள் நிணநீர் முனையங்கள் அல்லது நிணநீர் நாளங்கள் ஆனது, மெதுவாக செயல்படக் கூடும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வரும் காதலர் தினத்தில் உங்கள் காதலை முன்மொழிய வெற்றிகரமான சூத்திரம் இதுதான்!

Pagetamil

கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் கழுவக்கூடாதா?

Pagetamil

பருவமடைந்த, பிரசவித்த பெண்களுக்கான பிரத்யேக உணவுகள்!

Pagetamil

கணவாய் வறுவல்

Pagetamil

வெங்காயத் தாளில் 10 விதமான ரெசிப்பி!

Pagetamil

Leave a Comment