மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உரிய முறையில் பாதுகாக்கப்படாத தடுப்பூசிகள் கொழும்பிற்கு சென்றது: அதிர்ச்சி சம்பவம்!

Date:

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குளிரூட்டியில் சேமிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 குப்பி தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணியாளர்களிற்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்படவிருந்தது. எனினும், அந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை பணியாளர்கள் மறுத்துள்ளனர்.

தடுப்பூசி முறையாக- குளிரூட்டியில் சேமிக்கப்படவில்லையென அவர்கள் குற்றம்சாட்டினர்.

நேற்று முதல் இந்த சர்ச்சை நீடித்து வந்த நிலையில், இன்று தடுப்பூசிகள் கொழும்பிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

அனுப்பப்பட்ட ஒவ்வொரு குப்பியின் மூலமும் 10 பேருக்கு தடுப்பூசி செலுத்தலாமென தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

நீர்கொழும்பு சிறைக்கலவரத்தில் காயமடைந்த மேலும் 2 சிறை உத்தியோகத்தர்கள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்