25.4 C
Jaffna
January 1, 2025
Pagetamil
மருத்துவம்

நமக்கே தெரியாம நம் உடலுக்குள் கொரோனா இருந்திருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?

நீங்கள் அறியாமலே உங்களுக்கு கொரோனா வைரஸ் இருந்திருக்கக் கூடும். மேலும், அதனை நீங்கள் உறுதி செய்யும் வகையில், நாங்கள் உங்களுக்காக அதன் அறிகுறிகள் சிலவற்றை இங்கே இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம். அதை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பதிவை தவறாமல் படியுங்கள்!

தற்போதைய காலகட்டத்தில் (அதாவது, கொரோனா பரவலாக இருந்து வரும் சமயத்தில்), உங்கள் உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது. இது வெறும் சாதாரண சளி பிரச்சனையா, காய்ச்சலா அல்லது கொரோனா வைரஸா? சிலர், கொரோனாவினால் பாதிக்கப்படும் போது அவர்கள் மிகவும் நோய்வாய்ப்படுகிறார்கள். ஆனால், இன்னும் சிலர் தங்களுக்கு இந்த வைரஸ் இருப்பதைக் (அல்லது இருந்ததைக்) கூட உணரவில்லை.

நீங்கள் அறியாமலே உங்களுக்கு கொரோனா வைரஸ் இருந்ததா அல்லது இருக்கின்றதா என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறு அறிகுறிகளை படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

சளி / ஜலதோஷம்

தற்போதைய காலகட்டத்தில் பலருக்கும் சளி அல்லது ஜலதோஷம் ஏற்படுகிறது. இருப்பினும், மற்ற நாட்களை போல இந்த சளி ஆனது சாதாரணமான ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. இது கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம்.

உங்களுக்கு சளி மட்டுமே இருந்திருந்து, வேறு எந்த விதமான அசாதாரண அறிகுறிகளும் இல்லை என்றால், நீங்கள் சாதாரண ஜலதோஷத்தால் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாக, உங்கள் சளி அல்லது ஜலதோஷம் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் தொடர்புடையதாக இருந்தால், உங்களுக்கு கொரோனா வைரஸ் இருந்திருக்கக் அதிக வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

​பொதுவான கொரோனா வைரஸின் அறிகுறிகள்:

– காய்ச்சல் மற்றும் குளிர்

– இருமல்

– சுவாசிப்பதில் சிரமம் / மூச்சுத் திணறல்

– சோர்வு

– தசை வலி

– தலைவலி

– வாசனையின்மை மற்றும் சுவை இழப்பு

– தொண்டை வலி

– மூக்கு ஒழுகுதல்

– குமட்டல் மற்றும் வாந்தி

வயிற்றுப்போக்கு

​வாசனையின்மை மற்றும் சுவை இழப்பு

வாசனையின்மை மற்றும் சுவை இழப்பு ஆனது, கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த அறிகுறி ஆனது அனைத்து நோயாளிகளின் இடத்திலும் ஏற்படாது. மேலும், சாதாரணமான ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள் இடத்திலும் இந்த அறிகுறி காணப்படும். இருப்பினும், நீங்கள் நீண்ட காலமாக வாசனையின்மை மற்றும் சுவை இழப்பால் பாதிக்கப்பட்டு இருந்தால், உங்களுக்கு கொரோனா வைரஸ் இருந்திருக்கக் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

​முடி உதிர்தல்

முடி உதிர்தலுக்கும் கொரோனா வைரஸுக்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமா என்பது குறித்து ஒரு சிறிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. மேலும், அமெரிக்காவில், கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வரும் நோயாளிகள் பலரும் முடி உதிர்தலை எதிர்கொண்டு உள்ளனர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஒரு மருத்துவரின் கூற்றுப்படி, முடி உதிர்தல் என்பது ஒருபோதும் கொரோனா வைரஸின் ஒரே அறிகுறியாக இருக்காது என்பதை நாம் உணர வேண்டும். முடி உதிர்தலுடன் சேர்ந்து மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எதிர்கொண்டால், பின்பு நீங்கள் சந்தேகப்படுவதில் ஒரு அர்த்தம் உள்ளது. ஏனெனில், முடி உதிர்தல் என்பது மன அழுத்தத்தின் விளைவாக கூட இருக்கலாம்.

​மூச்சு திணறல்

மூச்சுத் திணறல் என்பது கொரோனா வைரஸின் நன்கு அறியப்பட்ட அறிகுறிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பலர் பல மாதங்களாக மூச்சுத் திணறலால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், இந்த மூச்சுத் திணறலால் நீங்கள் எவ்வளவு நாட்கள் பாதிக்கப்படுவீர்கள் என்பது இன்னும் தீர்மானமாக தெரியவில்லை. மேலும், இது நுரையீரலில் காணப்படும் நீடித்த வீக்கத்துடன் (இன்ஃபிளமேஷன்) தொடர்புடையதாக இருக்கலாம்.

இருப்பினும், நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கொரோனா நோயாளிகள் எதிர்கொள்ளும் அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்.

தொடர்ச்சியான இருமல்

ஒரு தொடர்ச்சியான இருமல் ஆனது, கொரோனா வைரஸின் பொதுவான அறிகுறியாக உள்ளது. பெரும்பாலும், இது உலர் இருமலாக காணப்படும்.

அதாவது, எந்த விதமான சளியும் இருப்பதில்லை. அமெரிக்காவின் ஒரு ஆய்வில், வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் 43 சதவீதம் பேர் நோயறிதலுக்குப் பிறகும் சுமார் 14 முதல் 21 நாட்கள் வரை தொடர்ந்து வறட்டு இருமல் இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

​சோர்வு

அமெரிக்க மருத்துவ சங்கத்தின் ஜர்னல் நடத்திய ஒரு ஆய்வில், கொரோனா வைரஸ் நோயாளிகளில் 53 சதவீதம் பேர் சில சமயங்களில் நோயறிதலுக்குப் பிறகும் 60 நாட்கள் வரை தீவிர சோர்வுக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டு உள்ளது. நீங்கள் சிறிது நேரம் மிகவும் சோர்வாக இருப்பதை உணர்ந்தாலோ, அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் இருப்பதை நீங்கள் கவனித்திருந்தால், உங்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் உங்களிடத்தில் தென்பட்டால். நீங்கள் பிறரிடம் இருந்து சற்று விலகி உங்களை நீங்களே தனிமை படுத்திக்கொள்வது நல்லது. அது மட்டுமின்றி, உங்களையும் உங்களை சார்ந்த நபர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்குமே உள்ளது!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒழுங்கற்ற தூங்கும் முறை நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு

Pagetamil

ஐந்தில் ஒரு பெண்கள் வாழ்நாளில் ஒரு முறையும் உடலுறவில் உச்சக்கட்டத்தை அனுபவிப்பதில்லை!

Pagetamil

புரையேறும் போது தலையில் தட்டலாமா?

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Pagetamil

மூட்டுவலி உள்ளவர்கள் தரையில் உட்காரக்கூடாது என்பது உண்மையா?

Pagetamil

Leave a Comment