வவுனியா மன்னார்வீதி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள காணியில் இருந்து தன்னை எழும்பிச் செல்லுமாறு சிலர் மிரட்டுவதாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் நபர் ஒருவரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முறைப்பாட்டினை பதிவுசெய்த நபர் தெரிவிக்கையில்,
எனதுகாணியில் இருந்து எழும்பிச்செல்லுமாறு சில நபர்கள் என்னை அச்சுறுத்துவதுடன், காணியின் அரைவாசியையாவது பிரித்து அவர்களிற்கு வழங்குமாறு தெரிவிக்கின்றனர். இல்லாவிடில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாக தெரிவித்து சிறையில் பிடித்து அடைக்கப்படுவாய் என்றும் அச்சுறுத்துகின்றனர்.
குறித்த காணியில் இருபது வருடங்களிற்கு மேலாக நான் வசித்துவருகின்றேன். இது தொடர்பாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்தார்.




