ஐ.நாவும் எமது வழிக்கே வந்துள்ளது!

Date:

உழைக்கும் மக்களின் உரிமைகள் சகலதும் வென்றிடவும், அரசியலுரிமையிலும் அபிவிருத்தியிலும் அன்றாட வாழ்விலும் தமிழர் தேசம் தலை நிமிர்வு பெற்றிடவும் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேதின செய்தியில் தெவித்துள்ளார்.

மேலும் அந்த செய்தியில்,

நாம் தமிழ் தேசிய இனத்தின் தேச விடுதலைக்காக மட்டும் போராட எழுந்தவர்கள் அல்ல.
தமிழ் சிங்கள முஸ்லிம் தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் எழுச்சியையும்,. ஒன்று பட்ட இலங்கைத்தீவின் ஒட்டு மொத்த புரட்சியையுமே எமது ஆரம்பகால இலட்சிய கனவாக நாம் கொண்டிருந்தவர்கள்.

எமது நெடுங்கனவை நிஜமாக்க நெஞ்சில் உறுதி கொண்டு நாம் எமது நீதியான உரிமைப் போராட்டக் களத்தில் அன்று நின்றிருந்தோம்.

தமிழர் தேசத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்பட்டதால் எமது உரிமை போராட்டம் அழிவு யுத்தமாக திசை மாறிச்சென்ற நிலையில், நாமும் அடுத்தவர்கள் போல் ஆற்றோடு அள்ளுண்டு போகாமல் எதிர் நீச்சலிட்டு, தீர்க்கதரிசனமாக எமது இலட்சிய பயணத்தின்
பாதையை மாற்றியிருந்தோம்.

பாதைகள் மாறினாலும் எமது இலக்கு நோக்கிய பயணம் நின்றுவிடவில்லை.

எமது தேசிய நல்லிணக்க பாதையில், உழைக்கும் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற நாம் முன்னெடுத்த திட்டங்களையும் செயல்களையும் வறிய மக்களுக்கு நாம் வழங்கும் நிரந்ததர வாழ்வியல் உரிமைகளையும் வெறும் சலுகைகள் என எம்மீது
அவதூறுகளை பொழிந்தவர்கள், தமக்கு கிடைத்த அரசியல் பலத்தின் அதிகாரங்களை வைத்து தமது சொந்த சலுகைகளுக்கு மட்டுமே விலை போனார்கள்.

அரசியல் தீர்வு குறித்து, மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வில் இருந்து தொடங்குவோம் என நாம் இடையறாது வலியுறுத்தி வந்த போது, அதை அரை குறைத் தீர்வென்று எம்மை எள்ளிநகையாடியவர்கள் இன்று ஐ.நா வே அதை பரிந்துரையாக
தெரிவித்திருக்கும் நிலையில், ஐ. நா வை காட்டி எமது மக்களை ஏமாற்ற நினைத்தவர்கள் இன்று ஐ. நா. தம்மை ஏமாற்றி விட்டதாக புலம்புகின்றனர்.

சிலர் எமது தீர்க்கதரிசன அரசியல் ஜதார்த்த வழிமுறையை ஏற்க தயாராகியும் விட்டனர்.
வரவேற்போம்!

உழைக்கும் மக்களே!,..ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களே!!

ஒன்று படுங்கள்,.. இதுவே உலகத்தொழிலாளர் தினத்தின் உரிமைக்குரல்!

அதை நிஜமாக்க, இன்றுள்ள உலக, உள்நாட்டு ஜதார்த்த அரசியல் நிலைமைகளை உணர்ந்து தமிழ் தேசிய இனத்தின் நிரந்தர அரசியல் உரிமைகளை வென்றெடுக்க
மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வில் இருந்து தொடங்கி இறுதி இலக்கு நோக்கி முன்னோக்கி செல்வோம்!..

எமது நிலத்தில், மக்கள் எமக்கு வழங்கும் அரசியல் பலத்தில் எமக்கு கிடைக்கும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்று அவர்களது வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம்.

தேசிய நல்லிணக்க கதவுகளை மூடி விட்டு எழுப்பும் போலி உரிமை குரல்களால் எந்த கோட்டையின் கதவுகளும் திறக்காது. இதுவே தமிழர் தேசத்தின் அனுபவம்.

தீராப்பிணிகள் என்று எவையுமில்லை. நம்பிக்கையுடன் கொடிய நோய் பிணிகளை கடந்து செல்வோம்.

உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லட்டும்!
தமிழர் தேசம் தலை நிமிரட்டும்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நான் குறிப்பிட்டது நாலு கால் புலியையே; 2 கால் புலிக்கு நான் ஆதரவல்ல: அந்தர் பல்டியடித்த ஊசி எம்.பி!

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, "புலி"  என்ற சொல்லை...

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில்...

இலங்கை ஊடகவியலாளர் நம்பிக்கை நிதியம்: அரசியல் பிரமுகர்களிடம் திட்ட அறிக்கை கையளிப்பு

இலங்கையின் மூவின ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு சிலோன் மீடியா போரத்தினால் முன்மொழியப்பட்டுள்ள...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்