கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்திய தரப்புடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இது தொடர்பாக ஆதரவையும் உதவிகளையும் வழங்கவும் சீனா தயாராக உள்ளது” என்று இந்தியாவிற்கான சீனத் தூதர் சன் வீடோங் கூறினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியாவுடனான தொற்று எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இந்தியாவிற்கு ஆதரவையும் உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள ஜின்பிங் தனது வருத்தத்தை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1