நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் ஜூலை 14 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குற்றவியல் புலனாய்வுத் துறை அவரை கைது செய்வதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி, எம்.பி. ஹரின் பெர்னாண்டோ நேற்று ஒரு அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்தார்,
இன்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மூத்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவன, இந்த வழக்கின் அடுத்த தவணை வரை ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட மாட்டார் என்றார்.
நீதிபதிகள் எஸ் துரைராஜா, குமுதினி விக்ரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1