தடுப்பூசி செலுத்தப்படா விட்டால் தொழிற்சங்க நடவடிக்கை: கிராம சேவகர் சங்கம்!

Date:

கோவிட் -19 தடுப்பூசியை தமக்கு வழங்குவதை அரசாங்கம் தொடர்ந்து தாமதப்படுத்தினால், வேலைநிறுத்தம் செய்வதாக இலங்கை கிராம சேவகர் சங்கம் எச்சரித்ள்ளது.

இன்று கண்டியில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சங்கத்தின் தலைவர் சுமித் கொடிக்கர, பலமுறை தாம் கோரிக்கை விடுத்த போதிலும், பொதுமக்களுடன் நெருக்கமாக பணியாற்றும் கிராம சேவகர்களிற்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

வலப்பனை பகுதி கிராம சேவகர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகிய நிலையில், இன்று காலமானார்.

பல கிராம சேவகர்கள் தேசிய தொற்று நோய்களுக்கான நிறுவனத்தில் பல நாட்கள் சிகிச்சை பெற்று வருவதாக கூறினார்.

இலங்கையில் சுமார் 12,000 கிராம சேவகர்கள் உள்ளனர். அவர்கள் தினசரி பொது மக்களுடன் நெருக்கமாக பணியாற்றுகிறார்கள்.

கடந்த சில நாட்களில் பல கிராம சேவகர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர், ஏனெனில் அவர்கள் பொதுமக்களின் முதல்நிலை தொடர்பில் உள்ளவர்கள்.

கிராமசேவகர்களிற்கு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகளிற்கு பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அவை நிறைவேற்றப்படாவிட்டால்,  தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...

டெங்கு பரிசோதனையில் சிக்கிய துப்பாக்கி

பத்தரமுல்லவின் பெலவத்த பகுதியில் டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்றின்போது, ​​இரண்டு மாடி...

முன்னாள் அமைச்சரின் மகனுக்கு விளக்கமறியல்

காவல்துறை உத்தியோகத்தர் போல் நடித்து, ஒரு சீன நாட்டவரின் வாகனம் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்