பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில், கலந்து கொண்டோருக்கு எதிரான வழக்கினை விசாரிக்க, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி வாலிபர் அணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.
நீதிமன்ற உத்தரவை மீறி பேரணியில் கலந்து கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணாக்கியன், )த.கலையரசன். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான )பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் அ.நிதான்சன், செ.கணேஸ் ஆகியோருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கு விபரம் குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனை தெரிவித்த தகவல்கள் கீழே-