அதர்வா நடிப்பில் உருவாகி வரும் தள்ளிப்போகாதே படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அதர்வா. பானா காத்தாடி பட த்தின் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அதர்வா, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன், 100, பூமராங்க், இமைக்கா நொடிகள் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் தான் தள்ளிப்போகாதே. ஆர் கண்ணன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
இந்தப் பட த்தில் ஆடுகளம் நரேன், காளி வெங்கட், வித்யுலேகா ராமன், ஆர் எஸ் சிவாஜி, அமிதாஷ் பிரதான் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், தள்ளிப்போகாதே பட த்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குடும்பம் மற்றும் உறவுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் பி.ஹெச்டி பட்டதாரியாகவும், அனுபமா பரமேஸ்வரன் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் பரதநாட்டிய டான்சராகவும் நடித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரனுக்கு பின்னணி பாடகி சின்மயி டப்பிங் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், தணிக்கைக்கு சென்ற இந்தப் பட த்திற்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், விரைவில் தள்ளிப்போகாதே படம் ஓடிடியிலோ அல்லது திரையரங்கிலோ வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.