ஹோவர் போர்டில் சாலையில் வானில் பறந்த மனிதன்!-வீடியோ

Date:

பாதுகாப்பு ஹெல்மெட்டை அணிந்திருக்கும் ஒரு நபர், ஹோவர் போர்டை இயக்கி சாலையில், வானில் பறக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உலகின் பல பகுதிகளில், குறிப்பாக மேலை நாடுகளில், ஹோவர் போர்டிங் திறமைகளை பலரும் வெளிப்படுத்தி கொண்டு தான் இருக்கின்றனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரையை தொடாமல் வானில் பறக்கும் ஹோவர் போர்டை பயன்படுத்த வேண்டும் என, ‘பேக் டு தி ஃபியூச்சர்’ திரைப்படத்தை பார்த்தவர்கள் அனைவருக்கும் தோன்றி இருக்கும். பலரும் அது போன்றதொரு ஹோவர் போர்டை உருவாக்க முயற்சித்து வந்தனர்.

ஆனால் யாருக்கும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில், சமீபத்தில் ஒரு நபர், 20,000 டாலர் (ரூ. 14 லட்சம்) மதிப்புள்ள ஹோவர் போர்டில், வானில் பறந்திருக்கிறார். ரெக்ஸ் சாப்மேன் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்த ஒரு வீடியோ, அதனை சாத்தியப்படுத்தியதை உறுதிப்படுத்தி இருக்கிறது. பறக்கும் அந்த நபர் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருக்கிறார். அவர் தரையில் இருந்து குறைந்தது இரண்டு மீட்டர் உயரத்தில் பறப்பதை வீடியோவில் காணலாம்.

https://twitter.com/i/status/1386004930360655875

இந்த வீடியோ தற்போது 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ்களுடன் 1.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்து வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் உள்ள ஹோவர் போர்டை, கனடாவைச் சேர்ந்த ஆம்னி ஹோவர்போர்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதன் முதல் புரோட்டோடைப் 275.9 மீ தூரம் வானில் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறது.

spot_imgspot_img

More like this
Related

‘எனது கணவர்… மன்னிக்கவும், எனது ஜனாதிபதி’: இணையத்தில் கிண்டலடிக்கப்படும் வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர்!

கரோலின் லெவிட் (Karoline Leavitt) என்பவருக்குப் பதிலாக வெள்ளை மாளிகையின் புதிய...

கொளத்தூரில் ஸ்டாலின் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டார்: திருமாவளவன் பேச்சு!

“கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெறுவது கடினம் என ஸ்டாலினிடம் முன்பே சொன்னேன்....

சிஜேபியின் ‘மூவர்ணக் கொடி’ போராட்டத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி டெல்லியில் நாளை (அக்.16) நடத்த உள்ள மூவர்ணக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்