விஜய் கூறியதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் இயக்க உறுப்பினர்கள்!

Date:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் கூறியதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்க நாட்டில் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதோடு, ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் என்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில், விஜய் கூறியதன் பேரில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் உதவி செய்துள்ளனர்.

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளின் தேவைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களும், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என்று அனைவருக்கும் முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்