இலங்கை

கைசுத்திகரிக்கும் வசதி இல்லாத 2,982 முச்சக்கர வண்டிகள் சிக்கின!

பொலிசார் நேற்று மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி சேவையில் ஈடுபட்ட1,240 முச்சக்கர வண்டிகளை கண்டறிந்துள்ளனர்.

நேற்று பொலிசாரால் 6,110 முச்சக்கர வண்டிகள் ஆய்வு செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.

அனேகமான முச்சக்கர வண்டிகளில் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான பயணிகள் ஏற்ப்பட்டிருந்தனர்.

3,073 முச்சக்கர வண்டிகளில், சாரதி இருக்கைக்கும் பயணிகளின் இருக்கைக்கும் இடையில் மறைப்பு இருக்கவில்லை. 2,982 முச்சக்கர வண்டிகள் கிருமிநாசினி அல்லது கை சுத்திகரிப்பு ஏற்பாடுகள் இருக்கவில்லை.

முச்சக்கர வண்டிகளில் சுகாதார விதிமுறைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என சாரதிகளிற்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வடக்கின் இன்றைய கொரோனா தொற்று விபரம்!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

வவுனியா வடக்கில் கடும் காற்று: இளம் விவசாயிக்கு ஏற்பட்ட இழப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!