வைத்த கண் வாங்காமல் பார்த்த ஆசாமி… மயங்கிய நடிகை!

Date:

பாத்திமா சனா ஷேக், ஈவ் டீசிங் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடித்த அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீமேக்கான சாச்சி 420 படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக்.

வளர்ந்த பிறகு அமீர்கானின் தங்கல் படத்தில் நடித்து பிரபலமானார். மீண்டும் அமீர்கானுடன் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்தார். அந்த படம் சரியாக போகவில்லை. மேலும் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.இந்த நிலையில் பாத்திமா சனா ஷேக்கை மர்ம நபர், ஈவ் டீசிங் செய்து தாக்கிய சம்பவம் பரபரப்பாகி உள்ளது.

இதுகுறித்து பாத்திமா சனா ஷேக் அளித்துள்ள பேட்டியில்,

“நான் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு திரும்பி வந்தபோது ஒருவன் என்னையே உற்றுப் பார்த்தான். ஏன் இப்படி பார்க்கிறாய் என்று கேட்டேன். அவனோ அப்படித்தான் பார்ப்பேன் என்றான். இதனால் எனக்கு கோபம் வந்து உதைப்பேன் என்றேன். அவனோ உதை பார்க்கலாம் என்றான். உடனே அவனை நான் அறைந்தேன். பதிலுக்கு அந்த ஆசாமி என்னை தாக்கினான். இதில் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. மயக்கம் தெளிந்து எனது தந்தையை தொடர்பு கொண்டு விவரத்தை சொன்னேன். அவர் சில ஆட்களை அழைத்துக் கொண்டு வந்தார். உடனே என்னை தாக்கியவன் அங்கிருந்து ஓடி விட்டான்’’ என்றார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்