ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான ஒன்றரை வயது குழந்தை அரசு மருத்துவமனையில் இடம் இல்லாத நிலையில் ஆம்புலன்சில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அச்சுதாபுரம் கிராமத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஜான்விதா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ஜான்விதாவை பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு உள்ள கொரோனா வார்டில் படுக்கை காலியாக இல்லை. எனவே சுமார் 2 மணி நேரம் ஆம்புலன்சில் காக்க வைக்கப்பட்ட குழந்தைக்கு அங்கேயே ஆக்சிசன் கொடுக்கப்பட்டது. ஆனாலும் குழந்தை பலியானது.
தங்களுடைய மகள் பரிதாபமாக மரணம் அடைந்ததை பார்த்து கொண்டிருந்த பெற்றோர் அலறி அழுத காட்சி பார்த்து கொண்டிருந்தவர்களை கண்கலங்க செய்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1