முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது!

Date:

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் கடற்படையினருடன் இணைந்து கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில் இன்று (28)அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது நாயாறு கொக்கிளாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மற்றும் வெளிச்சம் பாய்ச்சி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 படகுகளும் 12 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

நாயாறு பகுதியைச் சேர்ந்த 3 படகுகளும் புல்மோட்டை பகுதியை சேர்ந்த ஒருபடகும் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த ஐந்து படகுகளிலுமாக 12 தொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் வி.கலிஸ்ரன் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 12 பேரும் மற்றும் படகுகளும் இன்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட்டபோது 12 பேரையும் ஆட் பிணையில் நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக் குட்டி பாதுகாப்பாக மீட்பு!

அனுராதபுரம், மடவாச்சியாவின் வெவல்கெட்டிய பகுதியில் உடல்நலக் குறைவுடன் காணப்பட்ட ஆண் யானைக்...

யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி! தலைமுடி அறுக்கப்பட்டு, கண் பார்வை பாதிக்கும் அளவுக்கு ஆசிரியை மீது தாக்குதல்!

யாழ் நல்லுார்ப் பகுதியில் குடு்ம்பப் பெண் ஒருவர் தலைமுடிகள் அறுக்கப்பட்டு, கடுமையான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்