ஹீரோவாக களமிறங்கும் பிக் பாஸ் 3 முகேன் ராவ்!

Date:

பிக் பாஸ் 3 ஆரம்பத்தில், அமைதியாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், மீராவை எதிர்த்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றார். தைரியமாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டி புகழ்ந்துள்ளார். முகேனின் தைரியத்தாலும் மக்களின் ஆசீர்வாததாலும் பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இவருடைய பாடல் நான் சொல்லுறேன்டி’ பாடல் YOUTUBE – இல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பிக்பாஸ்க்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை இந்த பாடலை பாடச்சொல்லி கேட்டு ரசித்தனர். இந்நிலையில், முகேன் ராவுக்கு ஏன் பட வாய்ப்பு இன்னும் அமையவில்லை என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கையில், கடந்த வருடம் வெப்பம் படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகான் இயக்கத்தின் ‘வெற்றி’ என்னும் படத்தில் அவர் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் அந்த படத்தின் பற்றிய Update எதுவும் பெரிதாக வரவில்லை.

அதன் பின் தற்போது கிராமத்தை ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கும் “வேலன்” என்கிற படத்தில் முகேன் ராவ் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வந்து வைரல் ஆகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஒரு குடும்பத்தின் அதிகாரத்திற்காக இராணுவம், புலனாய்வு பிரிவின் ஒரு பகுதி செயற்பட்டிருந்தால் தண்டனை வழங்க பின்நிற்கமாட்டோம்: ஜனாதிபதி

ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல்...

பெண் பிசியோதெரப்பிஸ்ட் கழுத்து நெரித்து கொல்லப்பட்டார்!

தெல்தெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த அம்பாறை வைத்தியசாலையின் பெண் பிசியோதெரப்பிஸ்டின்...

ஈரான் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் கைவிட்டன: டிரம்ப்

ஈரானுக்கு எதிரான தனது போருக்கு ஆதரவளிக்காத நேட்டோ கூட்டணியின் உறுப்பினர்களால் தான்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்